கண்டிப்பாக வராது.
மழை வருமா என்பதற்கும்
, இடி நம் தலையில் விழுந்திடுமா என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கவே செய்கிறது. அதாவது முதல் கேள்வி நல்லெண்ண அடிப்படையில் வரக்கூடிய
நினைவு. அதே அடுத்த கேள்வி தீய எண்ணத்தின் அடிப்படையில் (அய்யத்தில்) வரக்கூடிய கேள்வி.
எண்ணங்கள் அடிப்படையிலேயே நமது செயல்பாடுகள் அமையும், நமக்கு நடக்கும் செயல்பாடுகள்
அமையும். என்பது நமக்கு தெரிந்ததே. (இன்னமல் ஆமல் பில்நியாத்)
ஒரு
சிறிய கட்டி வந்தாலே அது கேன்சர் கட்டியாக இருக்குமோ என்ற கேள்வி ஏன் ஏற்படுகிறது.
ஏன் அதனை நம் மனசு எதிர் பார்க்க வேண்டும்? அந்த எதிர்பார்ப்பே நம்மிடம் அந்த வியாதியை
நடைமுறை படுத்த எத்தனிக்கும். அதனை சோதித்து கூறத்தான் நம்மிடம் டாக்டர் ஷேஷாத்திரி
அவர்களும், டாக்டர் நூர்முகமது அவர்களும் இருக்கிறார்களே.
இன்னும்
ஒன்றை இங்கு நாம் நினைவு படுத்திக்கொண்டே ஆகவேண்டும். அதாவது இறைவன் கொடுக்க நினைப்பதை
யாராலும் தடுக்க முடியாது. தடுக்க நினைத்ததை யாராலும் கொடுக்க முடியாது. அதேபோல் ஒரு
இறக்கையில் விஷத்தை படைத்திருந்தால் மற்றொரு இறக்கையில் அதற்கான மாற்றையும் படைத்திருக்கிறான்
என்பது. இந்த நம்பிக்கை நம் யாவரையும் கண்டிப்பாக காக்கவே செய்யும். (கொல்லன் தெருவிலேயே
ஊசி விற்பதாக என்னை நினைக்க வேண்டாம்) இதனை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.
நமது
ஊர் பெரியதெருவில் வசித்த, காலம் சென்ற ஜனாப் “எக்ஸ்” அவர்கள் சொந்தத்தில் ஓர் தம்பதி
திருமணமாகி 4 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து பல டாக்டர்களிடம் சென்று சோதித்ததில்
இந்த பெண்ணுக்கு குழந்தை பெறுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்று கூறி தாங்கள்
வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார்கள். சரி என்று வீட்டுக்கு
வந்த அவர்கள், தங்களது “குழந்தை ஏக்கத்தை” முற்றும் துரந்துவிட்டு சந்தோஷமாக இருந்தனராம்.
பல வருடம் கழித்து எந்த மாத்திரை மருந்து சாப்பிடாது அவர்களுக்கு குழந்தை பிறந்து இன்று
10 வயது ஆகிறது. தேவை என்றால் அந்த குடும்பத்தினர் முகவரியை தருகிறேன் விசாரித்துக்கொள்ளலாம்.
இது எப்படி சாத்தியம் ஆகியது?
மை
பி என் ஓ வில் நான் எழுதி இருந்த “கேன்சரை போற்றுவோம்” என்ற கட்டுரையை கண்டிப்பாக அனைவரும்
படித்து பார்க்கவும்.
நம்மில்
பலர் பயப்படுவது இந்த பகுதியில் கிடைக்கும் மீனில் இருக்கும் நச்சுப்பொருளே, பெரும்பாலான
இஸ்லாமிய மக்களிடம் இந்த கேன்சரை உருவாக்கும் என்பதுதான். இது தேவையற்ற பயம். ஏன் என்றால் ஒரு வியாதி வந்தால்தான்
அந்த வியாதியை எதிர்க்கும் எதிர்ப்பாற்றலை
நம் உடல் பெறும் (கற்றுக்கொள்ளும்). இதனை அம்மை போன்ற கொள்ளை வியாதிகளில் இருந்து
நம் உடல் கற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட அம்மை கட்டுக்குள் வந்ததில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
இதையே
இஸ்லாமிய பார்வையில் பார்க்கும்போது மருந்தை படைத்துவிட்ட பின்னரே வியாதியை படைப்பதாக
சொல்லி இருப்பதும், நமது சக்திக்கு மீறி இறைவன் நம்மை சோதிப்பது இல்லை என்று கூறப்பட்டிருப்பதில்
இருந்தும் தெரிந்து கொள்ளலாம். எதையும் கற்றலின் போது கஷ்டமும் கற்ற பின் இன்பமும்
அடைவது சகஜம் தானே. அதுபோல் வியாதியை எதிர்க்கும் ஆற்றலை நம் உடல் கற்றுக்கொள்ளும்
வரை கஷ்ட்டப்படுவதும், கற்றுக்கொண்ட பின் உடல் சாந்தியும் சமாதானமும் அடைகிறது என்பதுதான்
உண்மை.
நாம்
மரக்கட்டை அல்ல. உயிருள்ள ஓர் உயர்ந்த ஜீவன். உயிர் உள்ளது என்றால் சளி சுரம் மட்டும்
அல்லாது இதுபோன்ற கடுமையான வியாதிகளும் வரத்தான் செய்யும், அதற்காக பதட்டப்படுவதால்
யாதொரு பயனும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
அதே
சமயம் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று வாளாது இருப்பதும் குற்றமே.
நாம்
எப்போது எல்லாம் இயற்கையை விட்டு விலகுகிறோமோ அப்போது எல்லாம் நாம் நமக்கு மாறு செய்து
கொண்டு இருக்கிறோம் என்பதனை உணரவேண்டும்.
நாம்
நமக்கு, நமது குடும்பத்துக்கு என்று செய்யும் இட்லி, தோசை. இடியாப்பம். ஊறுகாய். மிளகாய்
தூள், மஞ்சள் தூல் போன்றவற்றை நாமே தயார் செய்யாது அடுத்தவர்கள் நமக்கு செய்து கொடுக்கவேண்டும்,
காசை விட்டு எறிந்தால் பொருள் கிடைக்கும் என்கிற மன நிலைக்கு எப்போது வந்துவிட்டோமோ
அப்போதே ஆரோக்யத்தை இழக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதை உணரவேண்டும். நமது சோம்பேறித்தனமே
நமக்கு சத்ரு.
ஓர்
அமெரிக்கன் தான் சாப்பிடும் வென்னிலா ஐஸ்கிரீமை ஒருவித வென்னிலா என்கிற அவரை இன விதையில்
இருந்து தயார் செய்து சாப்பிடுகிறான் ஆரோக்யமாக இருக்கிறான். ஒரு கிலோ பாடம் செய்யப்பட்ட
விதை பத்தாயிரத்துக்கு மேலாம். பெங்களூர் பகுதிகளில் நன்றாக விளைச்சல் ஆகிறதாம். அந்த
தோட்டத்துக்கு சுற்றிலும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பதாக ஜூனியர் விகடன் இதழிழோ
அல்லது வேறு இதழிலோ 1980 களிலேயே படித்தேன். ஆனால் நாம் சாப்பிடும் வென்னிலா ஐஸ்கிரீம் சிந்தடிக்
எசன்ஸில் செய்யப்படுவதை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. ஆரோக்கியத்துக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும்
அக்கறை நம்மிடம் இல்லாது போனது ஏன்?
நமது சோம்பேறித்தனத்தால்
வியாபார நோக்குடன் செய்யப்படும் எந்த ஒரு பொருளிலும் நமக்கு ஒவ்வாத நச்சுப் பொருள்
இருக்கவே செய்யும். அதனை நம் உடல் ஏற்றுக்கொள்ள முயர்ச்சிக்கும்போது கேன்சர் செல்களின்
வளர்ச்சி ஏற்பட்டு நமக்கு உபாதை ஏற்படுத்தும் என்பதனை நாம் உணரவேண்டும். இது உணவால்
வரும் நச்சால் மட்டும் அல்ல, காற்றில் நச்சு
சேர்ந்து மாசுபட்டு வரும்போது நுரையீரல் மற்றும் தோலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆதலால் இயற்கையை விட்டு கூடியமட்டில் விலகாது இருப்பதே
நல்லது.
1.
நம்
குடும்பத்துக்கு தேவையான பதார்த்த வகைகளை நாமே நம் கைபட செய்வோம். முறுக்கு, சீடை,
பேனியா போன்றவற்றை நாம் செய்யும்போது நம் குடும்பத்தின் ஆரோக்யம் கண்டிப்பாக காக்கப்படும்.
2.
தோசை
மாவு, இடியாப்ப மாவு மற்றும் மஞ்சள் தூள் மசாலா பொடி போன்றவற்றை நாமே தயார் செய்து
கொள்வோம்.
3.
காலை
ஆவியில் வெந்த பதார்த்தங்களை நம் குடும்பத்துக்கு நாமே தயார் செய்து கொடுப்போம்.
4.
அந்தந்த
சீசனில் கிடைக்கும் பொருட்களை வேர்க்கடலை, பனங்கிழங்கு, கொட்டிக்கிழங்கு போன்றவற்றை
தவறாது வாங்கி சாப்பிடுவோம்.
5.
இது
வாயு, அது பித்தம் என்று எதையும் ஒதுக்க வேண்டாம். ஒரு பங்கு சாதம் சாப்பிட்டால் இரண்டு
பங்கு காய்கறி கீரை வகைகளும் இது போக கவுச்சி வகையறாக்கள் சாப்பிட நாம் ஆரோக்யமாக வாழலாம்.
6.
பிஸ்கட்டை
கூட தொடர்ந்து உட்கொள்வதும் கண்டிப்பாக தவறே.
7.
குர்குரே,
பீசா, பர்கர் இவைகளுக்கு அடிமை ஆவதும் தவறே.
8.
டி.வி
சீரியலை காசு கொடுத்து பார்த்து அழும் நேரத்தை ஒதுக்கினாலே ஆரோக்யம் நம் வசம்.
9.
நம்
சொந்த பந்தங்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் இவர்களை விட விளம்பரதாரர்கள் கண்டிப்பாக
உண்மை சொல்ல மாட்டார்கள்.
10.
விளம்பரத்தை
நம்பி பொருட்கள் வாங்கும் பழக்கம் கண்டிப்பாக வேண்டாம்.
No comments:
Post a Comment