Friday, May 17, 2013

ஆயுள் பேணும் ஆயில்


ஆயுள் பேணும் ஆயில்


ஒருவர் ஒரு பொருளை ஒரு காரணத்தை முன்னிறுத்தி இது நமது உடல் நலத்துக்கு நல்லது என்று கூறிவிட்டாலே, அதை நாம் உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டு அதைத்தவிர ஏனைய பொருட்கள் எல்லாம் கெடுதல் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறோம். இதுவே பொதுவாக நமது சகல பிரச்சனைகளுக்கும் மூல காரணமாகிவிடுகிறது.
சரி நேராக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். 50 வயதைத் தாண்டியவர்களில் பெரும்பாலனவர்களுக்கு உடலில் ஏதாவது உபாதைகள் தலை தூக்குவது இயல்பே. தோற்றம் என்று இருந்தால் அழிவு என்பது நிச்சயமே. இதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். என்றும் மார்கண்டேயன் என்பதெல்லாம் கதைக்கு மட்டுமே சாத்தியமாகும்.



எனது தாயார் சியாமளாதேவி அவர்களை உதாரனமாக கொள்வோம்.



நம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை நமது உடல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள இயலாத நிலை ஏற்படும் பட்சத்தில் கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணையை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர் மூலம் பரிந்துரைக்கப்படுவோம். இந்த நபருக்கு மட்டில்தான் இந்த ரீபைண்டு ஆயில் தகுந்த எண்ணெய். ஆனால் ஏனையோருக்கு இது தகுந்த எண்ணெய் அல்ல என்பதை உணரவேண்டும். அதற்கு பதில் ரீபைண்டு செய்யப்படாத எண்ணெய் கெட்டது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம். இங்குதான் நமது தவறான கருத்துக்கு பலம் கூட்டும் விதமாக விளம்பரங்களும் நமக்கு அனுகூல சத்ருவாக ரீபைண்டு ஆயில் உபயோகித்தால் ஆயுள் கூடும் என்றும் மாரடைப்பை தவிர்க்கலாம் என்றும் தம்பட்டம் அடித்து தனது விற்பனையை வெகுவாக பெருக்குகின்றார்கள்.
உடலில் கொலஸ்ட்டாலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையை இழந்த ஒருவருக்கு வேண்டுமானால் இது ஏற்ற எண்ணையாய் இருக்கலாம். அதே குடும்பத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்களுக்கு இது ஏற்ற எண்ணெயா? சற்று சிந்தித்து பார்ப்போமா?
ரீபைண்டு செய்யப்படும்போது உட்படுத்தப்படும் ட்ரீட்மென்டின்போது கொண்டு செல்லப்படும் கொதிநிலை, பளிச் என்று இருக்க (பிளீச் செய்ய) கலக்கப்படும் கெமிக்கல்கள் இவற்றால் இதில் உள்ள கொலஸ்ட்ரால் மட்டில் நீங்குவது கிடையாது, இதில் இருக்கும் நம் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் அழிக்கப்படுவதுதான் கொடுமை. இப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயினால் என்ன பலன் சற்று சிந்திப்போமா?
இப்போது நாம் ஒரு சோதனை செய்து பார்த்து பிறகு இந்த கருத்தை சீர்தூக்கிப் பார்ப்போமா?
ஓர் வாயகன்ற பாத்திரத்தில் ரீபைண்டு செய்யப்படாத தேங்காய் எண்ணையை ஊற்றி (தேங்காய் எண்ணையில்தான் மாற்றத்தை உடன் கண்டுபிடிக்க இயலும்) வெளிச்சம் இல்லாத அறையில் மூடாது வைக்கவும். அதேபோல் மற்றோர் ரூமில் ரீபைண்டு செய்த எண்ணையை முதல் ரூமில் வைத்தத்துபோல் வைக்கவும். ஒரு வாரம் கழித்து முறையே திறந்து பார்க்க முதல் அறையை திறந்தஉடன் துர்நாற்றம் (சிக்கு வாடை) வீசும். அடுத்த அறையை திறந்து பார்த்தால் வைத்த்து வைத்தபடியே எண்ணெய் வாடை சற்றும் குறையாது இருக்கும்.
இந்த துர்நாற்றம் எப்படி வருகிறது என்று பார்ப்போம். சாதாரணமாக காற்றில் பூஞ்சைக்காளானின் விதைகள் பறந்து வருவதை நாம் அறிவோம். (காற்றின் மூலம் விதை பரவுதல் முறைப்படி) அப்படி பரவும் விதை முறையே நாம் வைத்துள்ள இரண்டு எண்ணைகளிலும் விழுவது இயல்பே. அப்படி விழும் விதைகள் விழுந்த இடத்தில் கிடைக்கும் சத்துகளை எடுத்துக்கொண்டு வளர ஆரம்பிக்கும்.
ரீபைண்டு செய்யாத எண்ணையில் விழுந்த விதைகள் முளைத்து வளர்ந்து பூத்து தன் வாசனையை பரப்பும். இந்த வாசனைதான் துர்நாற்றமாக (சிக்கு அடித்தலாக) நமக்கு தெரிகிறது.
ரீபைண்டு செய்த எண்ணையில் விழுந்த விதைகள் அங்கு எந்த சத்து பொருட்களும் இல்லாததாலும், ப்ரிசர்வேட்டீவ் (ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து) இருப்பதாலும் வளர இயலாது போகிறது. அதனால் அந்த எண்ணெய் தன் இயல்பான சின்தட்டிக் வாசத்தை இழப்பதில்லை. சிக்கு வாசனை இல்லாததால் இந்த எண்ணெயே நல்ல எண்ணெய் என்று கொள்கிறோம்.
ரீபைண்டு செய்யா நல்எண்ணெய் சற்று கசக்கவே செய்யும், அந்த சிறு கசப்பில்தான் நம் உடலுக்கு தேவையான விட்டமின் மற்றும் மினரல்கள் இருப்பதை நாம் அறிய வேண்டும். சூடான கருப்பட்டி ஆப்பம் அல்லது இட்லியில் இந்த நல்லெண்ணையை தாராலமாக ஊற்றி சுவைத்து பாருங்கள் அந்த ருசியே அலாதிதான்.
*         சிறு உயிரிகளான பூஞ்சையே வளர இயலாத இந்த ரீபைண்டு ஆயிலை நாம் பயன்படுத்துவதால் பலன்தான் என்ன?
*      ப்ரிசர்வேட்டீவ் கலந்துள்ள ரீபைண்டு ஆயிலை (நச்சை) நாம் சாப்பிட்டு துன்பப்படத்தான் வேண்டுமா?
*         ஒரு தலைமுறைக்கு மேலாக நாம் ரீபைண்டு எண்ணையை உபயோகித்தும் மாரடைப்பு விழுக்காடு அதிகரிக்கவில்லையா?
*      நம் வீட்டு குழந்தைகள் என்ன பாவம் செய்தது? ரீபைண்டு ஆயிலை உபயோகித்து, அவர்களுக்கு கிடைக்கவேண்டிய சத்துக்களை கிடைக்காது செய்து, நோஞ்சானாக்கவா?

ஆதலால் ரீபைண்டு செய்யாத எண்ணையை உபயோகித்து வீட்டையும் நாட்டையும் பலப்படுத்துவோம் வாரீர்.
என்றும் அன்புடன நலனில்,
     மரு. லெ. பூபதி.


No comments:

Post a Comment

Blog Archive

About Me

My photo
PARANGIPETTAI, TAMILNADU, India
இயக்குனர் - லேக்ஷ்மணன் சித்த வைத்தியசாலை........................................................................ முன்னாள் பொது செயலாளர் - கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம்................... பொது செயலாளர் - சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம்.