Friday, May 17, 2013

விக்கல் தவிர்


விக்கல் தவிர்



முதல் நாள் இரவு விருந்து உண்டுவிட்டு குறிப்பாக அடை சாப்பிட்டுவிட்டு போதுமான அளவு தண்ணீர் குடிக்காது படுத்தன் விளைவாக மறு நாள் காலை துயில் எழுந்த்தும் ஓரு விக்கல் வந்த்தும் 5 விக்கலுக்குள்ளாக கீழ்கண்டவாறு செய்ய உடன் விக்கல் நிற்க்கும்.
நாம் துயில் எழும்வரை வராத விக்கல் அசைந்து எழுந்த உடன்  முதல் விக்கல் வந்த மரு கனம், சாப்பிட அமர்வது போல் அமர்ந்து ஒரு கனம் நிமிர்ந்து அமர்ந்து அடுத்த கனம் வலது கையை தாழ்த்தி இடது கையை உயர்த்தி வலது புறமாக நன்றாக சாய வேண்டும். 5 நொடி அப்படியே இருந்து மெதுவாக நிமிர்ந்து இடது கையை தாழ்த்தி வலது கையை உயர்த்தி இடதுபுறமாக சாய்ந்து 5 நொடி அப்படியே இருந்து மெதுவாக நிமிர விக்கல் நிற்க்கும் இல்லை எனில் திரும்ப ஒருமுறை செய்ய கண்டிப்பாக விக்கல் நிற்க்கும். சாய்வது 45 டிகிரிக்கு குறையாது இருக்கவேண்டும்.
இது எப்படி சரியாகிறது என்று பார்ப்போம். அடை போன்ற எளிதில் செரிக்க இயலாத உணவுகளை சாப்பிட்டு உடன் படுக்கும்போது செரிமான மண்டலம் சரிவர செரிக்க இயலாது சிறுகுடலை கடந்து செல்லும்போது போதுமான தண்ணீர் இல்லாத உணவு உணவு பாதையில் பயனிக்க இயலாது தடை பட்டு நின்றுவிடும். அப்படி நின்ற உணவு நாம் துயில் எழுந்த்தும் நகர பார்க்கும் அப்படியும் நகர இயலாத பட்சத்தில் மூளைக்கு உணவு நகரவில்லை என்று செய்தி போகும். அங்கு ஏதோ பிரச்சனை என்று உனர்ந்த மூளை உதரவிதாணத்துக்கு உத்தரவு இட்டு அதனை துடிக்க செய்யும். அப்படி உதரவிதானம் துடிக்கும் போது முறத்தில் இட்ட தானியம் போல குடல் நன்றாக புடைக்கப்படும். இந்த செயலால் உணவு சற்று நகரப்பெற்று சகஜ நிலையினை அடையும்.
நாம் உயிர்வாழ நம் உடல் என்ன என்ன செயல்கள் எல்லாம் செய்கிறது பார்த்தீர்களா?
   என்றும் உங்கள் நலனில்,
   மரு. லெ. பூபதி.

No comments:

Post a Comment

Blog Archive

About Me

My photo
PARANGIPETTAI, TAMILNADU, India
இயக்குனர் - லேக்ஷ்மணன் சித்த வைத்தியசாலை........................................................................ முன்னாள் பொது செயலாளர் - கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம்................... பொது செயலாளர் - சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம்.