மருந்து
இன்றி தீர்ந்தது சளி பிரச்சனை
எமது வைத்திய
சாலைக்கு தீரா சளி பிரச்சனையாக இருக்கிறது என்று ஒரு குடும்பமே வந்தது.
குடும்பத்தில் ஒருவருக்கு என்றால் அவருக்கு எதிர்ப்பு சக்தி இல்லையா, சத்துக்குறைவு
இருக்கிறதா, நோய்த்தொற்று ஏதும் உண்டா என்று ஆராய்ந்து அதற்கான மருந்து கொடுத்து அனுப்பலாம். பாதகம் இல்லை,
ஆனால் தாய், தந்தை, பிள்ளைகள் இருவர் அனைவருக்கும் சளி. அதுவும் தீரா சளி, பல
இடங்களில் வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. அப்படி என்றால் அது பொதுவான ஏதோ ஒரு
பிரச்சனையாய் எனக்கு தோன்றியது ஆதலால்
அவர்களது உணவு மற்றும், இதர பழக்க வழக்கங்களை விசாரித்து பார்த்தேன். இறுதியாக
தான் வெளிநாட்டில் இருந்து வந்ததில் இருந்துதான் இந்த பிரச்சனை என்றும், தாம்
வரும்வரை வீட்டில் அனைவரும் சவுகரியமாகத்தான் இருந்தனர் என்றுரைக எனக்குள் ஏதோ பொறி
தட்டியதுபோல் இருந்தது. அப்புறம் வெளி நாட்டில் இருந்து என்ன தின்பண்டங்கள் எடுத்துவந்தீர்கள்
என்று வினவ, அவரும் பதில் கூற ஏதும் எனக்கு பிடிபடவில்லை. அவரோ தின்பண்டம் தவிர
தான் எடுத்துவந்த பல பொருட்களை பற்றி கூறுகையில் அந்த லிஸ்ட்டில் “ஏர் கூலர்” இருக்க
நோய்
நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்
நாடி வாய்ப்பச் செயல்.
என்ற வள்ளுவனின்
கூற்றுக்கேற்ப வியாதியின் மூலம் இப்போது எனக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. இவ்வளவு
வைத்தியம் பார்த்தும் நோய் அதுவும் குடும்பத்துக்கே தீராது இருந்ததன் காரணம்
உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்துவிட்ட்து.
உடன் அவர்களுக்கு
மருந்து ஏதும் தராது, ஏர் கூலரை உபயோகப்படுத்த வேண்டாம். பிரச்சனையே அதானால்தான்
என்று தெளிவாக கீழ்கண்ட உதாரணத்துடன் விளக்கி அனுப்ப, ஒரு மாதம் கழித்து தாங்கள்
சுகமாய் இருப்பதாக உளமாற நன்றி கூறி சென்றதை கூறவும் வேண்டுமோ?
ஏர்
கூலரால் சளி? – அறிவியல் நோக்கில் விளக்கம்.
ஃபேன் – காற்றை
ஒரு இடத்தில் இருந்து ம்றறோர் இடத்துக்கு நகர்த்துகிறது.
ஏர் கூலர் - காற்றை
ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்துவதுடன், காற்றில் கொஞ்சம் நீர்த்திவலைகளை
ஏற்றியும் அனுப்புகிறது.
ஏர் கண்டிஷனர் –
காற்றில் இருக்கும் உஷ்ணத்தை உறிஞ்சி சூடு இல்லா காற்றாக அனுப்புகிறது.
ஏர் கண்டிஷனரைவிட
ஏர் கூலர் மிகவும் விலை கம்மியாக இருப்பதால் நம்மில் பலர் ஏர் கூலரையே நாடுகிறோம்.
ஆனால் இதன் மூலம் நாம் பெறும் காற்றில் ஈரப்பதம் மிகவும் அதிகமாக இருப்பதால் அதில்
இருந்து காற்றில் பரவும் நீர்த்திவலைகள் நமது உன்னதமான நுரையீரலுக்கு செல்லும்போது
அங்கே தங்கிவிடுகின்றன. இந்த நீர்த்திவலைகளை (ஃபாரின் பாடி) அங்கிருந்து வெளியேற்ற,
நமது நுரையீரலில் சளியை அதிக அளவில்
உற்பத்தி செய்து நீரை வெளியேற்ற படாத பாடுபடுகிறது.
ஏர் கூலர்
இருக்கும் ரூமில் நீர்த்திவலைகள் இருப்பதை நாம் எப்படி உறுதி செய்து கொள்வது? கீழ்கண்ட
சோதனையில் இதனை உறுதி செய்துகொள்வோமா? ஒரு ஈரத்துணியை முறையே ஏர் கூலர் இருக்கும்
ரூமிலும், ஏர் கண்டிஷனர் இருக்கும் ரூமிலும் போட்டு வைத்தோமேயானால் 10 நாள்
ஆனாலும் ஏர் கூலர் உள்ள ரூமில் இருக்கும் துணி காயவே காயாது. இதன் காரணம் ரூமில்
இருக்கும் காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருப்பதே.
என்றும்
உங்கள் நலனில்,
மரு. லெ. பூபதி.
No comments:
Post a Comment