மேற்பூச்சு மருந்தால் வலி எப்படி போகிறது?
அன்று எல்லாம் தலைவலி
என்று சொன்னால் உடன் கிராம்பு, சுக்கு, பெருங்காயம், மிளகு இவற்றில் ஏதாவது ஒன்றை
எடுங்கள் கொஞ்சம் சுடு தண்ணீர் விட்டு இழைத்து தலையில் பத்து போடுங்கள்
சரியாகிவிடும் என்று சொல்வார்கள். அதேபோல் தடவ சுகம் பெறுகிறோம்.
இன்று எல்லாம் எடுங்கள் பெயின் பாமை தலையில்
தடவுங்கள் என்று கூற கேட்க்கிறோம். அதேபோல் தடவ சுகமும் பெறுகிறோம்.
இவற்றை தடவ வலி எப்படி
நீங்குகிறது என்று அறிவியல் பூர்வமாக பார்ப்போமா?
ஒரு கோட்டை அழிக்காது அதனை சின்ன கோடாக மாற்றுவது எப்படி? ரொம்ப யோசிக்க
வேண்டாம், பக்கத்தில் ஓர் அதைவிட பெரிய கோடு போட்டால் முன் இருந்த பெரிய கோடு
சின்னதாகிவிடும். இந்த ஒரு விஷயத்தை வைத்து 1980 களில் “இரு கோடுகள்” என்று ஓர்
தமிழ் திரைப்படம் கூட வந்தது நினைவு இருக்கலாம். இதே தத்துவம்தான் இந்த வலி விஷயத்திலும்
நடக்கிறது.
தலை பொட்டில் விண் விண்
என்று வலிப்பதாக வைத்துக் கொள்வோம். அது வலிக்கும் பரப்பளவு தோராயமாக 1 சதுர
இன்ச்சாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். தோராயமாக 10 சதுர இன்ச் அளவுக்கு ஏதாவது ஒரு
எரிச்சல் ஊட்டும் பொருளை வலி இருக்கும் ஏரியாவில் இருக்கும் தோல் மீது தடவ சற்று
நேரத்தில் வலி முற்றிலும் மறந்துபோகும். இது எப்படி பலன் அளிக்கிறது? (இரு கோடுகள்
தத்துவம்தான்) 1 சதுர இன்ச்சுக்கு வலிக்கிறது என்ற செய்தி மூளைக்கு சென்றுகொண்டே
இருக்கும். அது வலியாக நம் மூளையால் உணரப்பட்டு வலித்துக்கொண்டே இருக்கும். 10 சதுர
இன்ச் அளவுக்கு ஓர் எரிச்சல் ஊட்டும் பொருளை (அது கிராம்போ அல்லது பெயின் பாமோ) தடவும்போது
10 சதுர இன்ச்சுக்கு எரிகிறது என்ற தகவல் செல்லும், அப்படி செல்கையில் வலி மூழ்கி
போய்விடுகிறது, அதாவது மறக்கடிக்கப்படுகிறது.
சாதாரமாக நமக்கு ஒரு
பிரச்சனை இருக்கும்போது, அதைவிட பெரிய பிரச்சனை வரும்போது முதல் பிரச்சனை
நீத்துப்போவதில்லையா அதுபோல்தான் இதுவும்.
ஒட்டகத்தின் மீது சுமை
ஏற்றி முடித்ததும், ஓர் சிரிய சுமையை இறக்கி விடுவார்களாம், அதுவும் எல்லா
சுமைகளையும் இறக்கி விட்டதாக எண்ணி
இலகுவாக சுமந்து செல்லுமாம். அதிலும் இதே யுக்த்திதான்.
எது எப்படியோ வலி
நிவாரணியாக மாத்திரைகள் (பெயின் கில்லர்கள்) உபயோகிப்பதை விட, இதுபோன்ற மேற்பூச்சு
மருந்துகள் உபயோகிப்பது தவறு இல்லை எனலாம்.
No comments:
Post a Comment