இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க (நடக்க) வேண்டியது
தினம் முடியில் எண்ணை தடவவேண்டும் ஏன்?
சீனர்கள்
தங்கள் முகத்தில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருக்கும் முடியை (பேரூந்து நிறுத்தங்களில்
பேரூந்துக்காக காத்திருக்கும் நேரத்தை வீணாக்காது) இரண்டு காசுகளை தங்கள் கைகளில்
லாவகமாக பற்றி அதன் இடையே முடியை பிடித்து இழுத்து தங்கள் முடிகளை, முகத்தில் இருந்து
அகற்றிக்கொள்வார்கள்.
நமது கிராமங்களில்
கால் கை போன்ற இடங்களில் இருக்கும் முடியினை நீக்க வேண்டுமாயின், சாம்பலை கையில்
தொட்டுக்கொண்டு அல்லது முடிகளில் தடவிட்டு பிடித்திழுத்து அகற்றிக்கொள்வார்கள்.
நகரங்களில்
நூல் கொண்டோ அல்லது மெழுகு அல்லது ஒட்டும் பசை உள்ள பொருள்களை நீக்க வேண்டிய
முடிகளில் ஒட்டி வேகமாக இழுத்து முடியை அகற்றிக்கொள்வார்கள்.
நவீன
நாகரீக யுகத்தில் வலி இன்றி அகற்ற இரசாயன கலப்பு கிரீம் அல்லது லோஷங்கள்
வந்துள்ளது அதனை முடிமீது தடவி சற்று நேரத்தில் திஷு பேப்பரால் துடைத்து, முடியை
அகற்றிக்கொள்வார்கள்.

மேலே
சொன்ன நான்கு முறைகளில் மேலே இருக்கும் மூன்று முறைகள் சற்று வலி இருக்குமே அன்றி பின்
விலைவுகளுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கடைசி முறையில் வலி சற்றும் இருக்காதே அன்றி
பின் விலைவுக்கு அதிக வாய்ப்பு உண்டு.
இப்போது
விஷயத்துக்கு வருகிறேன். தலையில் எண்ணை தடவுவதால் தலையில் இருக்கும் தோல் எண்ணை
பசையுடன் இருந்து வேருக்கு வலுவூட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், முடியின்
மேல்பரப்பில் எண்ணை பசை படர்ந்திருப்பதால் சீப்பினூடே பயனிக்கையில்
வழுக்கிக்கொண்டு முடி கழலாது காப்பாற்றப்படும். அதே எண்ணை தடவாது விட்டால் எண்ணை
பசை இல்லாதது மட்டுமல்லாது காற்றில் பரந்துவரும் தூசுகள் சாம்பல் படர்வது போல்
படிந்து வெரும் கையால் முடியை கோதினாலே முடி அகல்வது திண்ணம். இப்படியே அகல
ஆரம்பித்தால் சில காலத்திலேயே வழுக்கைதான்.
அப்புரம்
இந்த கவலை விஸ்வரூபம் எடுத்து, அதனாலும் கொஞ்சம் முடி கொட்டும். அதன் பின் இந்த மூலிகை
தைலம் தடவினால் சரியாகிவிடுமா அல்லது அந்த மூலிகை தைலம் தடவினால் சரியாகிவிடுமா
என்று அலைய சொச்சம் முடியும் அகன்றுவிடும். தும்ப விட்டு வால பிடிப்பதை விட தினம் நல்ல
அல்லது தேங்காய் எண்ணை தடவி முடியை காப்பாற்றி கொள்வோம்.
கைக்கு எட்டும்
தூரத்தில் இருக்கும் உயர்ந்த மூலிகை தென்னை. அந்த தேங்காய் எண்ணையை விடவா இறக்குமதி
செய்யப்பட்ட மூலிகைத்தைலம் ஒஸ்த்தி? சற்று சிந்தித்துப்பார்ப்போமா?
No comments:
Post a Comment