கெண்டை ஏறுதல் அல்லது கொரக்கலி வாங்குதல்
(cramps)
கெண்டை
ஏறுதல் என்றும் கொரக்கலி வாங்குதல் என்றும் சொல்லப்படும் இது, பெரும்பாலும் கால்
அல்லது கைகளில் இருக்கும் தசை நார்கள் தன் இஷ்டத்துக்கு பெரளுவதைத்தான் கூறுவோம்.
இது பெரும்பாலும் உடல் பெலஹீனத்தால் ஏற்படுவதே. உடலில் சத்து பற்றாக்குறைதான்
அதற்கு முக்கிய காரணம். அப்படி ஏற்படும் சமயம் பயங்கரமாக வலிக்கும். சில நிமிடம் வரை
நீடிக்கும் இந்த வலி நம்மை துடிதுடிக்க வைத்துவிடும் என்பதை நாம் அறிவோம்.
சத்தான சரிவிகித உணவாக, “ஒரு பங்கு சாதம்
இருபங்கு காய்கரி மற்றும் கீரை வகைகள்” என சாப்பிட்டுவர நாளடைவில் சுகம் காணலாம்.
நமது உடலில் சத்துக்கள் கிட்டும் வரை வரும் இந்த பிரச்சனையை சிரமப்படாது வலி இன்றி
எதிர்கொள்ள ஓர் எளிய உபாயம் கூறுகிறேன்.
இது
பெரும்பாலும் இரவு தூங்கும்போது நாம் உடலில் திமிர் முரிக்கும்போது இந்த சதை
பிரளலின் வலி காலில் ஏற்படும். அதுசமயம் திமிர் முரிக்க ஆரம்பிக்கும்போதே மரவாது
கால் பாதங்களை கையால் டாட்டா காட்டுவது போல் பாதங்களை
ஆட்ட சதை பிரளல் வலி சிறிதும் இருக்காது. இது திண்ணம்.
No comments:
Post a Comment