லெக்ஷ்மணன் சித்த வைத்தியசாலை

Friday, July 13, 2018

"கேன்சர்!!! நமமூர் காரர்களுக்கு வருமா?"





"கேன்சர்!!! நமமூர் காரர்களுக்கு வருமா?"
கண்டிப்பாக வராது.
மழை வருமா என்பதற்கும் , இடி நம் தலையில் விழுந்திடுமா என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கவே செய்கிறது.  அதாவது முதல் கேள்வி நல்லெண்ண அடிப்படையில் வரக்கூடிய நினைவு. அதே அடுத்த கேள்வி தீய எண்ணத்தின் அடிப்படையில் (அய்யத்தில்) வரக்கூடிய கேள்வி. எண்ணங்கள் அடிப்படையிலேயே நமது செயல்பாடுகள் அமையும், நமக்கு நடக்கும் செயல்பாடுகள் அமையும். என்பது நமக்கு தெரிந்ததே. (இன்னமல் ஆமல் பில்நியாத்)
            ஒரு சிறிய கட்டி வந்தாலே அது கேன்சர் கட்டியாக இருக்குமோ என்ற கேள்வி ஏன் ஏற்படுகிறது. ஏன் அதனை நம் மனசு எதிர் பார்க்க வேண்டும்? அந்த எதிர்பார்ப்பே நம்மிடம் அந்த வியாதியை நடைமுறை படுத்த எத்தனிக்கும். அதனை சோதித்து கூறத்தான் நம்மிடம் டாக்டர் ஷேஷாத்திரி அவர்களும், டாக்டர் நூர்முகமது அவர்களும் இருக்கிறார்களே.
            இன்னும் ஒன்றை இங்கு நாம் நினைவு படுத்திக்கொண்டே ஆகவேண்டும். அதாவது இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. தடுக்க நினைத்ததை யாராலும் கொடுக்க முடியாது. அதேபோல் ஒரு இறக்கையில் விஷத்தை படைத்திருந்தால் மற்றொரு இறக்கையில் அதற்கான மாற்றையும் படைத்திருக்கிறான் என்பது. இந்த நம்பிக்கை நம் யாவரையும் கண்டிப்பாக காக்கவே செய்யும். (கொல்லன் தெருவிலேயே ஊசி விற்பதாக என்னை நினைக்க வேண்டாம்) இதனை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.
            நமது ஊர் பெரியதெருவில் வசித்த, காலம் சென்ற ஜனாப் “எக்ஸ்” அவர்கள் சொந்தத்தில் ஓர் தம்பதி திருமணமாகி 4 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து பல டாக்டர்களிடம் சென்று சோதித்ததில் இந்த பெண்ணுக்கு குழந்தை பெறுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்று கூறி தாங்கள் வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார்கள். சரி என்று வீட்டுக்கு வந்த அவர்கள், தங்களது “குழந்தை ஏக்கத்தை” முற்றும் துரந்துவிட்டு சந்தோஷமாக இருந்தனராம். பல வருடம் கழித்து எந்த மாத்திரை மருந்து சாப்பிடாது அவர்களுக்கு குழந்தை பிறந்து இன்று 10 வயது ஆகிறது. தேவை என்றால் அந்த குடும்பத்தினர் முகவரியை தருகிறேன் விசாரித்துக்கொள்ளலாம். இது எப்படி சாத்தியம் ஆகியது?
            மை பி என் ஓ வில் நான் எழுதி இருந்த “கேன்சரை போற்றுவோம்” என்ற கட்டுரையை கண்டிப்பாக அனைவரும் படித்து பார்க்கவும்.
           நம்மில் பலர் பயப்படுவது இந்த பகுதியில் கிடைக்கும் மீனில் இருக்கும் நச்சுப்பொருளே, பெரும்பாலான இஸ்லாமிய மக்களிடம் இந்த கேன்சரை உருவாக்கும் என்பதுதான்.  இது தேவையற்ற பயம். ஏன் என்றால் ஒரு வியாதி வந்தால்தான் அந்த வியாதியை எதிர்க்கும் எதிர்ப்பாற்றலை  நம் உடல் பெறும் (கற்றுக்கொள்ளும்). இதனை அம்மை போன்ற கொள்ளை வியாதிகளில் இருந்து நம் உடல் கற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட அம்மை கட்டுக்குள் வந்ததில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
            இதையே இஸ்லாமிய பார்வையில் பார்க்கும்போது மருந்தை படைத்துவிட்ட பின்னரே வியாதியை படைப்பதாக சொல்லி இருப்பதும், நமது சக்திக்கு மீறி இறைவன் நம்மை சோதிப்பது இல்லை என்று கூறப்பட்டிருப்பதில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். எதையும் கற்றலின் போது கஷ்டமும் கற்ற பின் இன்பமும் அடைவது சகஜம் தானே. அதுபோல் வியாதியை எதிர்க்கும் ஆற்றலை நம் உடல் கற்றுக்கொள்ளும் வரை கஷ்ட்டப்படுவதும், கற்றுக்கொண்ட பின் உடல் சாந்தியும் சமாதானமும் அடைகிறது என்பதுதான் உண்மை.
            நாம் மரக்கட்டை அல்ல. உயிருள்ள ஓர் உயர்ந்த ஜீவன். உயிர் உள்ளது என்றால் சளி சுரம் மட்டும் அல்லாது இதுபோன்ற கடுமையான வியாதிகளும் வரத்தான் செய்யும், அதற்காக பதட்டப்படுவதால் யாதொரு பயனும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
            அதே சமயம் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று வாளாது இருப்பதும் குற்றமே.
            நாம் எப்போது எல்லாம் இயற்கையை விட்டு விலகுகிறோமோ அப்போது எல்லாம் நாம் நமக்கு மாறு செய்து கொண்டு இருக்கிறோம் என்பதனை உணரவேண்டும்.
            நாம் நமக்கு, நமது குடும்பத்துக்கு என்று செய்யும் இட்லி, தோசை. இடியாப்பம். ஊறுகாய். மிளகாய் தூள், மஞ்சள் தூல் போன்றவற்றை நாமே தயார் செய்யாது அடுத்தவர்கள் நமக்கு செய்து கொடுக்கவேண்டும், காசை விட்டு எறிந்தால் பொருள் கிடைக்கும் என்கிற மன நிலைக்கு எப்போது வந்துவிட்டோமோ அப்போதே ஆரோக்யத்தை இழக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதை உணரவேண்டும். நமது சோம்பேறித்தனமே நமக்கு சத்ரு.
            ஓர் அமெரிக்கன் தான் சாப்பிடும் வென்னிலா ஐஸ்கிரீமை ஒருவித வென்னிலா என்கிற அவரை இன விதையில் இருந்து தயார் செய்து சாப்பிடுகிறான் ஆரோக்யமாக இருக்கிறான். ஒரு கிலோ பாடம் செய்யப்பட்ட விதை பத்தாயிரத்துக்கு மேலாம். பெங்களூர் பகுதிகளில் நன்றாக விளைச்சல் ஆகிறதாம். அந்த தோட்டத்துக்கு சுற்றிலும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பதாக ஜூனியர் விகடன் இதழிழோ அல்லது வேறு இதழிலோ 1980 களிலேயே படித்தேன்.  ஆனால் நாம் சாப்பிடும் வென்னிலா ஐஸ்கிரீம் சிந்தடிக் எசன்ஸில் செய்யப்படுவதை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. ஆரோக்கியத்துக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை நம்மிடம் இல்லாது போனது ஏன்?
நமது சோம்பேறித்தனத்தால் வியாபார நோக்குடன் செய்யப்படும் எந்த ஒரு பொருளிலும் நமக்கு ஒவ்வாத நச்சுப் பொருள் இருக்கவே செய்யும். அதனை நம் உடல் ஏற்றுக்கொள்ள முயர்ச்சிக்கும்போது கேன்சர் செல்களின் வளர்ச்சி ஏற்பட்டு நமக்கு உபாதை ஏற்படுத்தும் என்பதனை நாம் உணரவேண்டும். இது உணவால் வரும் நச்சால் மட்டும் அல்ல,  காற்றில் நச்சு சேர்ந்து மாசுபட்டு வரும்போது நுரையீரல் மற்றும் தோலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.  ஆதலால் இயற்கையை விட்டு கூடியமட்டில் விலகாது இருப்பதே நல்லது.
1.       நம் குடும்பத்துக்கு தேவையான பதார்த்த வகைகளை நாமே நம் கைபட செய்வோம். முறுக்கு, சீடை, பேனியா போன்றவற்றை நாம் செய்யும்போது நம் குடும்பத்தின் ஆரோக்யம் கண்டிப்பாக காக்கப்படும்.
2.       தோசை மாவு, இடியாப்ப மாவு மற்றும் மஞ்சள் தூள் மசாலா பொடி போன்றவற்றை நாமே தயார் செய்து கொள்வோம்.
3.       காலை ஆவியில் வெந்த பதார்த்தங்களை நம் குடும்பத்துக்கு நாமே தயார் செய்து கொடுப்போம்.
4.       அந்தந்த சீசனில் கிடைக்கும் பொருட்களை வேர்க்கடலை, பனங்கிழங்கு, கொட்டிக்கிழங்கு போன்றவற்றை தவறாது வாங்கி சாப்பிடுவோம்.
5.       இது வாயு, அது பித்தம் என்று எதையும் ஒதுக்க வேண்டாம். ஒரு பங்கு சாதம் சாப்பிட்டால் இரண்டு பங்கு காய்கறி கீரை வகைகளும் இது போக கவுச்சி வகையறாக்கள் சாப்பிட நாம் ஆரோக்யமாக வாழலாம்.
6.       பிஸ்கட்டை கூட தொடர்ந்து உட்கொள்வதும் கண்டிப்பாக தவறே.
7.       குர்குரே, பீசா, பர்கர் இவைகளுக்கு அடிமை ஆவதும் தவறே.
8.       டி.வி சீரியலை காசு கொடுத்து பார்த்து அழும் நேரத்தை ஒதுக்கினாலே ஆரோக்யம் நம் வசம்.
9.       நம் சொந்த பந்தங்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் இவர்களை விட விளம்பரதாரர்கள் கண்டிப்பாக உண்மை சொல்ல மாட்டார்கள்.
10.   விளம்பரத்தை நம்பி பொருட்கள் வாங்கும் பழக்கம் கண்டிப்பாக வேண்டாம்.
                                       சிந்திப்போம். சிறப்பாக வாழ்வோம்.


இந்த கட்டுரை எங்கள் உள்ளூர் பத்திரிக்கையான "எழுதுகோல்" என்ற மாதாந்திர இதழுக்காக அவர்கள் கொடுத்த கொடுத்த தலைப்புக்காக எழுதப்பட்டது.

Wednesday, December 30, 2015

செக்ஸ் பிரச்சனை பிரச்சனைதானா?



ஒரு தெளிந்த அம்மையாரின் பேச்சை கேட்போம். தெளிவோம். பெயர் தெரியாத அம்மையாருக்கு என் மனமார்ந்த நன்றி.

Wednesday, August 6, 2014

மேற்பூச்சு மருந்தால் வலி எப்படி போகிறது?



மேற்பூச்சு மருந்தால் வலி எப்படி போகிறது?
     அன்று எல்லாம் தலைவலி என்று சொன்னால் உடன் கிராம்பு, சுக்கு, பெருங்காயம், மிளகு இவற்றில் ஏதாவது ஒன்றை எடுங்கள் கொஞ்சம் சுடு தண்ணீர் விட்டு இழைத்து தலையில் பத்து போடுங்கள் சரியாகிவிடும் என்று சொல்வார்கள். அதேபோல் தடவ சுகம் பெறுகிறோம்.
இன்று எல்லாம் எடுங்கள் பெயின் பாமை தலையில் தடவுங்கள் என்று கூற கேட்க்கிறோம். அதேபோல் தடவ சுகமும் பெறுகிறோம். 


      இவற்றை தடவ வலி எப்படி நீங்குகிறது என்று அறிவியல் பூர்வமாக பார்ப்போமா?  ஒரு கோட்டை அழிக்காது அதனை சின்ன கோடாக மாற்றுவது எப்படி? ரொம்ப யோசிக்க வேண்டாம், பக்கத்தில் ஓர் அதைவிட பெரிய கோடு போட்டால் முன் இருந்த பெரிய கோடு சின்னதாகிவிடும். இந்த ஒரு விஷயத்தை வைத்து 1980 களில் “இரு கோடுகள்” என்று ஓர் தமிழ் திரைப்படம் கூட வந்தது நினைவு இருக்கலாம்.  இதே தத்துவம்தான் இந்த வலி விஷயத்திலும் நடக்கிறது.
     தலை பொட்டில் விண் விண் என்று வலிப்பதாக வைத்துக் கொள்வோம். அது வலிக்கும் பரப்பளவு தோராயமாக 1 சதுர இன்ச்சாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். தோராயமாக 10 சதுர இன்ச் அளவுக்கு ஏதாவது ஒரு எரிச்சல் ஊட்டும் பொருளை வலி இருக்கும் ஏரியாவில் இருக்கும் தோல் மீது தடவ சற்று நேரத்தில் வலி முற்றிலும் மறந்துபோகும். இது எப்படி பலன் அளிக்கிறது? (இரு கோடுகள் தத்துவம்தான்) 1 சதுர இன்ச்சுக்கு வலிக்கிறது என்ற செய்தி மூளைக்கு சென்றுகொண்டே இருக்கும். அது வலியாக நம் மூளையால் உணரப்பட்டு வலித்துக்கொண்டே இருக்கும். 10 சதுர இன்ச் அளவுக்கு ஓர் எரிச்சல் ஊட்டும் பொருளை (அது கிராம்போ அல்லது பெயின் பாமோ) தடவும்போது 10 சதுர இன்ச்சுக்கு எரிகிறது என்ற தகவல் செல்லும், அப்படி செல்கையில் வலி மூழ்கி போய்விடுகிறது, அதாவது மறக்கடிக்கப்படுகிறது.  
      சாதாரமாக நமக்கு ஒரு பிரச்சனை இருக்கும்போது, அதைவிட பெரிய பிரச்சனை வரும்போது முதல் பிரச்சனை நீத்துப்போவதில்லையா அதுபோல்தான் இதுவும்.
       ஒட்டகத்தின் மீது சுமை ஏற்றி முடித்ததும், ஓர் சிரிய சுமையை இறக்கி விடுவார்களாம், அதுவும் எல்லா சுமைகளையும்  இறக்கி விட்டதாக எண்ணி இலகுவாக சுமந்து செல்லுமாம். அதிலும் இதே யுக்த்திதான்.
     எது எப்படியோ வலி நிவாரணியாக மாத்திரைகள் (பெயின் கில்லர்கள்) உபயோகிப்பதை விட, இதுபோன்ற மேற்பூச்சு மருந்துகள் உபயோகிப்பது தவறு இல்லை எனலாம்.

Thursday, July 3, 2014

தினம் முடியில் எண்ணை தடவவேண்டும் ஏன்?



இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க (நடக்க) வேண்டியது
தினம் முடியில் எண்ணை தடவவேண்டும் ஏன்?

சீனர்கள் தங்கள் முகத்தில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருக்கும் முடியை (பேரூந்து நிறுத்தங்களில் பேரூந்துக்காக காத்திருக்கும் நேரத்தை வீணாக்காது) இரண்டு காசுகளை தங்கள் கைகளில் லாவகமாக பற்றி அதன் இடையே முடியை பிடித்து இழுத்து தங்கள் முடிகளை, முகத்தில் இருந்து அகற்றிக்கொள்வார்கள்.
நமது கிராமங்களில் கால் கை போன்ற இடங்களில் இருக்கும் முடியினை நீக்க வேண்டுமாயின், சாம்பலை கையில் தொட்டுக்கொண்டு அல்லது முடிகளில் தடவிட்டு பிடித்திழுத்து அகற்றிக்கொள்வார்கள்.
நகரங்களில் நூல் கொண்டோ அல்லது மெழுகு அல்லது ஒட்டும் பசை உள்ள பொருள்களை நீக்க வேண்டிய முடிகளில் ஒட்டி வேகமாக இழுத்து முடியை அகற்றிக்கொள்வார்கள்.
நவீன நாகரீக யுகத்தில் வலி இன்றி அகற்ற இரசாயன கலப்பு கிரீம் அல்லது லோஷங்கள் வந்துள்ளது அதனை முடிமீது தடவி சற்று நேரத்தில் திஷு பேப்பரால் துடைத்து, முடியை அகற்றிக்கொள்வார்கள்.
ஆக முடி அகல வேண்டுமாயின் முடியின் மேல்புரம் வழவழப்பு இன்றி கொரகொரப்பாக இருக்கவேண்டும் (அப்போது தான் பிடிமானம் கிடைக்கும்).
மேலே சொன்ன நான்கு முறைகளில் மேலே இருக்கும் மூன்று முறைகள் சற்று வலி இருக்குமே அன்றி பின் விலைவுகளுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கடைசி முறையில் வலி சற்றும் இருக்காதே அன்றி பின் விலைவுக்கு அதிக வாய்ப்பு உண்டு.
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். தலையில் எண்ணை தடவுவதால் தலையில் இருக்கும் தோல் எண்ணை பசையுடன் இருந்து வேருக்கு வலுவூட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், முடியின் மேல்பரப்பில் எண்ணை பசை படர்ந்திருப்பதால் சீப்பினூடே பயனிக்கையில் வழுக்கிக்கொண்டு முடி கழலாது காப்பாற்றப்படும். அதே எண்ணை தடவாது விட்டால் எண்ணை பசை இல்லாதது மட்டுமல்லாது காற்றில் பரந்துவரும் தூசுகள் சாம்பல் படர்வது போல் படிந்து வெரும் கையால் முடியை கோதினாலே முடி அகல்வது திண்ணம். இப்படியே அகல ஆரம்பித்தால் சில காலத்திலேயே வழுக்கைதான்.
அப்புரம் இந்த கவலை விஸ்வரூபம் எடுத்து, அதனாலும் கொஞ்சம் முடி கொட்டும். அதன் பின் இந்த மூலிகை தைலம் தடவினால் சரியாகிவிடுமா அல்லது அந்த மூலிகை தைலம் தடவினால் சரியாகிவிடுமா என்று அலைய சொச்சம் முடியும் அகன்றுவிடும்.  தும்ப விட்டு வால பிடிப்பதை விட தினம் நல்ல அல்லது தேங்காய் எண்ணை தடவி முடியை காப்பாற்றி கொள்வோம்.
கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் உயர்ந்த மூலிகை தென்னை. அந்த தேங்காய் எண்ணையை விடவா இறக்குமதி செய்யப்பட்ட மூலிகைத்தைலம் ஒஸ்த்தி? சற்று சிந்தித்துப்பார்ப்போமா?

Tuesday, June 17, 2014

கெண்டை ஏறுதல் அல்லது கொரக்கலி வாங்குதல்



கெண்டை ஏறுதல் அல்லது கொரக்கலி வாங்குதல்
(cramps)
 

கெண்டை ஏறுதல் என்றும் கொரக்கலி வாங்குதல் என்றும் சொல்லப்படும் இது, பெரும்பாலும் கால் அல்லது கைகளில் இருக்கும் தசை நார்கள் தன் இஷ்டத்துக்கு பெரளுவதைத்தான் கூறுவோம். இது பெரும்பாலும் உடல் பெலஹீனத்தால் ஏற்படுவதே. உடலில் சத்து பற்றாக்குறைதான் அதற்கு முக்கிய காரணம். அப்படி ஏற்படும் சமயம் பயங்கரமாக வலிக்கும். சில நிமிடம் வரை நீடிக்கும் இந்த வலி நம்மை துடிதுடிக்க வைத்துவிடும் என்பதை நாம் அறிவோம்.
     சத்தான சரிவிகித உணவாக, “ஒரு பங்கு சாதம் இருபங்கு காய்கரி மற்றும் கீரை வகைகள்” என சாப்பிட்டுவர நாளடைவில் சுகம் காணலாம். நமது உடலில் சத்துக்கள் கிட்டும் வரை வரும் இந்த பிரச்சனையை சிரமப்படாது வலி இன்றி எதிர்கொள்ள ஓர் எளிய உபாயம் கூறுகிறேன்.
இது பெரும்பாலும் இரவு தூங்கும்போது நாம் உடலில் திமிர் முரிக்கும்போது இந்த சதை பிரளலின் வலி காலில் ஏற்படும். அதுசமயம் திமிர் முரிக்க ஆரம்பிக்கும்போதே மரவாது கால் பாதங்களை கையால் டாட்டா காட்டுவது போல் பாதங்களை ஆட்ட சதை பிரளல் வலி சிறிதும் இருக்காது. இது திண்ணம்.                                
 



Blog Archive

About Me

My photo
PARANGIPETTAI, TAMILNADU, India
இயக்குனர் - லேக்ஷ்மணன் சித்த வைத்தியசாலை........................................................................ முன்னாள் பொது செயலாளர் - கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம்................... பொது செயலாளர் - சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம்.